Sani peyarchi palan 2025 to 2027 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 to 2027 | மேஷ ராசி முதல் கடக ராசி வரை

மேஷ ராசி முதல் கடக ராசி வரை | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 to 2027

Sani peyarchi palan 2025 to 2027
2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி முதல் கடக ராசி வரை

இந்தப் பதிவிலே மேஷ ராசி முதல் கடக ராசி வரை உள்ள 6 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம் . ( sani peyarchi palan 2025  to 2027 ) சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 to 2027 . அடுத்த பதிவிலே துலாம் ராசி முதல் மீன ராசி வரைக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் ! மேஷ ராசி முதல் கடக ராசி வரை எந்தெந்த ராசிக்கு சனிப்பெயர்ச்சியினால் நன்மை , அதேபோல் எந்தெந்த ராசிக்கு சனி பெயர்ச்சியினால் தாக்கம் , என்பதை இந்த பதிவிலே உங்களுக்கு தெளிவாக எழுதி இருக்கிறேன், இப்போது பதிவை முழுமையாக படியுங்கள் !

சனிப்பெயர்ச்சி எப்போது ? (2025 to 2027)

2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் . 2027 ஜுன் 3 ஆம் தேதி வரை மீனத்தில் இருப்பார் . இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை, மற்றும் எந்தெந்த ராசிகளுக்கு தொந்தரவு தரும் இந்த சனி பெயர்ச்சி என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் ! தன்னுடைய சொந்த வீடான கும்பத்தில் இருந்து குருவினுடைய வீட்டிற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் ! மீனம் என்பது நீர் ராசியாகும் . வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிக்கும் ராசியாகும் .

அயன சயன போக ஸ்தானம், கட்டில் ஸ்தானம், விரைய ஸ்தானம் , கால புருஷ தத்துவப்படி இது பன்னிரெண்டாவது வீடும் ஆகும் . எனவே மேற் சொன்ன விஷயங்களில் சனி பகவான் தாக்கத்தை ஏற்படுத்துவார் . இந்தத் தாக்கம் எந்த ராசிக்கு பலம், எந்த ராசிக்கு பலவீனம் தெளிவாக இப்பொழுது 12 ராசிகளுக்கும் பார்க்கலாம் !

எல்லா வளமும் நலமும்

இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, இறைவன் எல்லா வளமும் நலமும் கொடுத்து நீங்கள் வாழ்வாங்கு வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் .

நான் உங்கள் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro , What’s up And Ph : 97 42 88 64 88

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi palan 2025 to 2027 )

Sani peyarchi palan 2025 to 2027

வீர தீர செயல்களில் சாதிக்கும் மேஷ ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் இப்பொழுது பன்னிரண்டாம் இடத்தில் வருகிறார் . அடுத்த ஏழரை வருடம் உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கும் . அதாவது 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை .
உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பம் . 2025 மார்ச் முதல் கவனமாக இருக்க வேண்டும் . வீண் வம்பு வழக்கு தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம் . பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் .

கவனம் செலுத்த வேண்டும்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். . இந்த ஏழரை சனியில் திருமணம் செய்யலாம். ஆனால் வீடு வாகன யோகம் மட்டும் உடனே ஏற்படாது. வீடு கட்ட விருப்பம் உள்ளவர்கள் உங்கள் சுய ஜாதகத்தை பார்த்து முடிவு செய்யுங்கள் . உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும் . எனவே வீண் பேச்சுகள் விவாதங்களை இந்த காலகட்டங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும் .

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள்

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும் . உங்கள் ஜாதகத்தை ஒரு முறை ஜோதிடர் இடத்தில் கொடுத்து பார்த்து தொழிலை ஆரம்பியுங்கள் . உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் ஒரு சில நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும் . எனவே புதிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவதற்கு முன்னர் ஜாதகம் பார்த்து செயல்படுங்கள் . என்னிடம் ஜாதகம் பார்க்க விருப்பமுள்ளவர்கள், என்னுடைய இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் ph 97 42 88 64 88

ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi palan 2025 to 2027 )

Sani peyarchi palan 2025 to 2027

 

உங்கள் காட்டில் நல்ல மழை தான்

நிர்வாக திறமை உடைய ரிஷப ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் 2025 மார்ச் முதல் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . பதினோராம் இடத்து சனிபகவான் உங்களுக்கு நல்ல அனுகூலங்களை கொடுக்கப் போகிறார் . அடுத்த இரண்டரை வருடம் உங்கள் காட்டில் நல்ல மழை தான் . இந்த காலகட்டத்தில் நீங்கள் சாதிக்க நினைத்த அத்தனை விஷயத்தையும் செயல்படுத்த ஆரம்பியுங்கள் .

சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும்.

இருப்பினும் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். எனவே எந்த ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னிடம் உங்கள் ஜாதகத்தை கொடுத்து பார்த்து விட்டு ஆரம்பியுங்கள். திருமணம் ஆகாதவர்ளுக்கு திருமணம் நடக்கும் . குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இது அருமையான காலகட்டம் . குழந்தை பாக்கியம் ஏற்படும் . புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இது அருமையான காலகட்டம் . போட்டு வைத்த திட்டங்கள் அனைத்தும் செயல்படக்கூடிய காலகட்டம் இதுவாகும் .

வேலை கிடைக்கும் | வெற்றி மேல் வெற்றிதான்

வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது கூடுதல் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் . இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருக்க வேண்டும்.

இனி தொட்டதெல்லாம் வெற்றியில் தான் முடியும் . இந்த இரண்டரை வருட காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்துங்கள், விடாமுயற்சியோடு செயல்படுங்கள் . நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், அந்த வயதிற்கு உண்டான விஷயங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும் . எனவே 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை உங்களுக்கு நல்ல நேரமே . இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தியும் நன்றாக இருந்தால் வெற்றி மேல் வெற்றிதான் .

மேலும் முக்கியமான விஷயங்களை செயல்படுத்த முடிவு செய்வதற்கு முன்னர், என்னிடம் உங்கள் ஜாதகத்தை கொடுத்து பார்த்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் .

மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi palan 2025  to 2027 )

mithuna rasi

புத்தி கூர்மை உடைய மிதுன ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 2025 மார்ச் மாதம் முதல் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாக போகிறார் . இந்தப் பத்தாம் இடத்து சனி பகவான் உங்களுக்கு, தொழில் வேலை உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் 60 சதவீதம் நன்மை தரப்போகிறார் . திருமணம் ஆகாதவர்களுக்கு கடுமையான முயற்சியின் பெயரில் திருமணம் நடக்கும் . குழந்தை பாக்கிய அனுகூலம் உண்டு. வீடு கட்ட நினைப்பவர்கள் சற்று காத்திருந்து செயல்படுத்துங்கள் . அல்லது என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்த்து செயல்படுங்கள் .

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் . தேவையில்லாமல் வெளியில் கடன் வாங்க வேண்டாம். இருக்கும் வருமானத்தைக் கொண்டு உங்கள் பொருளாதாரத்தை திட்டமிட்டு செயல்படுங்கள் . மாணவர்களுக்கு 60% நன்மை உண்டு . வயதானவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் . மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 60% நன்மைகள் உண்டு . உங்கள் சுய ஜாதகத்திலும் தசா புத்தி நன்றாக இருந்தால் கூடுதல் நன்மைகள் உங்களுக்கு நடக்கும் . என்னிடம் ஜாதகம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொலைபேசி வழி அழையுங்கள் ! Ph 97 42 88 64 88

கடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi 2025 )

kadaga rasi

அஷ்டம சனியில் இருந்து விடுதலை

அன்பும் கருணையும் கொண்ட கடக ராசி நேயர்களே ! உங்களுக்கு கடந்த இரண்டரை வருட காலம் அஷ்டம சனியாக இருந்தது . அதிலிருந்து மீண்டு வரப் போகிறீர்கள். நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள் மற்றும் செயல்படாத சில விஷயங்கள் இப்பொழுது நடக்கப் போகிறது !, இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் அஷ்டம சனியாக இருந்த சனி பகவான் இப்பொழுது ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு மத்திமமான பலன்களை கொடுக்கும் .

60% நன்மைகள் உண்டு

திருமணம் ஆகாதவர்களுக்கு உங்களுடைய சுய ஜாதகத்தில், தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே திருமணம் நடக்கும் திருமணம் கைகூடும். சொந்தமாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று யோசித்து ஆரம்பிங்கள் . வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் . குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் .

வீடு வாகன யோகம் அமையும்

வீடு கட்ட முடியவில்லை என்று நினைத்தவர்களுக்கு சொந்தமாக வீடு வாகன யோகம் அமையும். வீடு கட்ட ஆரம்பிக்க போகிறீர்கள் . உங்கள் வேலையில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும் வருமானம் உயரும் . படிப்பில் இதுவரை கவனம் செலுத்த முடியாமல் இருந்த மாணவர்கள், இப்பொழுது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல தேர்ச்சி பெறுவீர்கள் ! வயதானவர்களுக்கு இதுவரை உடல் உபாதைகள் அதிகம் கொடுத்து கொண்டு வந்தது இனிமேல் படிப்படியாக உடல் நலம் சீராகும் .

சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால்

தொழில் செய்வதாக இருந்தாலும் , வீடு கட்ட ஆரம்பிப்பதாக இருந்தாலும், எந்த ஒரு முக்கியமான விஷயங்கள் செய்வதாக இருந்தாலும், உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் நீங்கள் நினைத்த விஷயங்கள் நல்ல விதமாக நடக்கும் . எனவே முக்கியமான விஷயங்களை நீங்கள் செயல்படுத்தி ஆரம்பித்து நடத்துவதற்கு முன்பாக, என்னிடம் உங்கள் ஜாதகத்தை கொடுத்து ஒரு முறை பார்த்து நல்ல தேதியில் ஆரம்பியுங்கள் வெற்றி நிச்சயம் . Ph : 97 42 88 64 88

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi palan 2025 )

simma rasi

கண்டக சனி முடிகிறது அஷ்டம சனி ஆரம்பிக்கிறது

நேர்மை குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ! சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . 2025 மார்ச் வரை உங்களுக்கு கண்டக சனி நடைபெறும் . அதன் பிறகு உங்களுக்கு அஷ்டம சனி ஆரம்பம் ! இந்த அஷ்டம சனி காலம் உங்களுக்கு சற்று கஷ்ட காலமாகத் தான் இருக்கும் . இஷ்ட தெய்வத்தை வழிபடுவதன் மூலம் கஷ்ட காலத்தை கடந்து விடலாம் . இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கடுமையான முயற்சியின் பேரில் திருமணம் நடக்கும் . தொழில் உத்தியோக வழி மேன்மையில் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும் .

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள்

புதிய தொழில் செய்ய ஆரம்பிக்க இருப்பதாக இருந்தால் இந்த காலகட்டத்தில் ஒத்தி போட வேண்டும் . புதிதாக வீடு கட்ட ஆரம்பிப்பவர்களும் இரண்டு வருடம் கழித்து ஆரம்பிக்க வேண்டும் . அல்லது உங்கள் சுய ஜாதகத்தை என்னிடம் கொடுத்து, நல்ல தசா புத்தி நடைபெற்றால் நல்ல சுப விஷயங்களை நீங்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக செய்து முடிக்கலாம் . அதற்கு ஜாதகம் வழி விடுகிறதா என்பதை பார்த்துவிட்டு நான் உங்களுக்கு சொல்லுகிறேன் . தொலைபேசி வழி ஜாதக பலன் கூறப்படும் தொடர்புக்கு ph : 97 42 88 64 88.

கடுமையான சோதனை

திருமணம் ஆனவர்களுக்கு இது ஒரு கடுமையான சோதனை காலகட்டமாக இருக்கும் . இருப்பினும் நீங்கள் சிம்ம ராசி என்பதால் .. அஞ்சா நெஞ்சத்தோடு நேர்மையோடு இருந்தால் எல்லா விஷயத்தையும் நீங்கள் கடந்து சாதிக்க முடியும் . உங்கள் நல்ல குண இயல்பை எப்பொழுதும் பின்பற்றுங்கள் . ஆனால் யாருக்காகவும் நல்ல விஷயங்களை விட்டுக் கொடுக்காதீர்கள் . அதேசமயம் பாதுகாப்பு உணர்வோடு செயல்படுங்கள் .

யாரிடமும் வீண்வம்பு இந்த காலகட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் உங்களை வீண் வம்புக்கு இழுப்பார்கள் . உங்கள் வளர்ச்சியில் பொறாமைப் படுவார்கள் . எல்லாம் ஆண்டவன் செயல் என்று உங்கள் வேலையில் தொழிலில் கவனத்தை செலுத்துங்கள் .

சிம்மராசி பெண்களுக்கு

உங்களுக்கு இது சற்று கடுமையான சோதனை காலகட்டமாக இருக்கும் குடும்பத்தில் சில வீண் பிரச்சனைகள் எட்டிப் பார்த்து பின்பு சரியாகிவிடும் . புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, என்னிடம் உங்கள் ஜாதகத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி தொலைபேசி வழி ஜாதகம் பார்த்து எந்த ஒரு புதிய விஷயத்தையும் முடிவு செய்து ஆரம்பிங்கள் வெற்றி நிச்சயம் .

உங்களுடைய தசா புத்தி அடிப்படையில் நேரம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு உங்களுக்கு பலன் சொல்கிறேன். தொலைபேசி வழியாக ! என்னுடைய தொலைபேசி எண்ணை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன் அதில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ! மேலும் உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் என்னிடம் தொலைபேசி வழியே தெரிந்து கொள்ளலாம் !

கண்டக சனியை நிதானமாக கடந்து செல்லுங்கள்

இந்த கண்டக சனியை நிதானமாக கடந்து செல்லுங்கள் . எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து செய்யுங்கள் ! கடன் வாங்குவதை தவிர்க்கவும் . வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து பொருளாதாரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள் ! வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் !

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை ( sani peyarchi palan 2025 )

kanni rasi

உங்களுக்கு கண்டக சனி ஆரம்பம்

நுட்பமான சிந்தனை ஆற்றலால் முன்னேறிக் கொண்டிருக்கும் கன்னி ராசி நேயர்களே ! கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் . இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் ? இதுவரை ஆறாம் இடத்தில் இருந்த சனி பகவான் உங்களுக்கு ஒரு சில நல்ல நன்மைகளை கொடுத்திருக்கிறார் . இதனை நீங்கள் சரியாக பின்பற்றி இருந்தால் தற்போது நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பீர்கள் .

ஒருவேளை உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லாத பட்சத்தில் நன்மைகள் உங்களைத் தேடி வந்திருந்தாலும் சில தடைகளை சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள் . அதாவது கோச்சாரப்படி சனிபகவான் 2025 மார்ச் வரை உங்களுக்கு நல்ல அனுகூலத்தை கொடுக்கிறார் . அடுத்து 2025 மார்ச்சுக்கு பிறகு தான் உங்களுக்கு சோதனை காலகட்டம் ஆரம்பிக்கிறது . இருப்பினும் அச்சம் கொள்ள வேண்டாம் . உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் தப்பித்து சரியான வழியில் செயல்படுவீர்கள் .

கண்டக சனியை கடக்க உங்களுக்கு இப்போது நிதானம் தேவை

ஏழாம் இடத்து சனி என்பது கண்டகசனியாகும் . வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைத்து தொந்தரவு கொடுக்கும் . எனவே தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல்.. உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள் . அப்பொழுதுதான் சில தர்மசங்கடங்களில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் . 2025 மார்ச்சுக்கு பிறகு சோதனை காலகட்டமாக இருந்தாலும் , எதிரிகளால் இருந்த தொல்லை தற்போது விலகும் .

எதிரி விலகி விடுவார்கள்

உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் உங்கள் எதிரி தானாகவே உங்களை விட்டு விலகி விடுவார்கள் . எனவே இந்த கண்டக சனியில் இந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கும் . ஆனால் மற்றபடி பொருளாதார நிலையில் சற்று வீக்கத்தை உங்களுக்கு கொடுக்கும் . எனவே தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும் .

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ நீங்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இந்த இரண்டரை வருட கால கட்டமாகும் . 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருந்தே ஆக வேண்டும் . குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிக்க வேண்டும்.

பணம் கொடுக்கல் வாங்கல்

பெரிய பணத்தொகை கொடுக்கல் வாங்கல் , சொத்து சார்ந்த விஷயங்கள் , இந்த காலகட்டத்தில் தவிர்க்கவும் . அதாவது கடன் வாங்க கூடாது , யாருக்கும் கடனும் கொடுக்கக் கூடாது இதை கண்டிப்பாக நீங்கள் இந்த காலகட்டத்தில் கடைபிடித்து ஆக வேண்டும் . தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள் . திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பெரிய போராட்டமாக இருக்கும் . சீக்கிரமாக வரன் அமையாது . உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் ஓரளவுக்கு திருமண வாய்ப்பு உங்களை தேடி வரும் .

புதிய முயற்சிகளை ஒத்தி போடவும்

ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் அதிகப்படியாக கவனம் செலுத்துங்கள் இப்போதைக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வர வேண்டாம் . செய்யும் அந்த விஷயத்தையே தொடர்ந்து செய்யுங்கள் . தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது உத்தியோகத்தை அல்லது சுய தொழிலை தொடர்ந்து அதே போன்று நடத்தி செல்லுங்கள் . புதிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் . மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் . கடுமையான முயற்சியின் பேரில்தான் நல்ல மதிப்பெண்களை மாணவர்கள் பெற முடியும் .

வீட்டு பெரியவர்களின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு பின்பு சரியாகிவிடும் . மருத்துவ ஆலோசனை பெறுவது சிறப்பு . அஜாக்கிரதியாக இருந்துவிட வேண்டாம் .
கன்னி ராசி நேயர்களே , மேலும் உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு உங்கள் சுய ஜாதக அடிப்படையில் உங்களுக்கு தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்து பலன் சொல்லுவேன் ! விருப்பமுள்ளவர்கள் என்னை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுங்கள் ! Phone Call 97 42 88 64 88 , What’s up 97 42 88 64 88

துலாம் ராசி முதல் மீன ராசி வரை உள்ள நேயர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

இதே website இல், துலாம் ராசி முதல் மீன ராசி வரை உள்ள நேயர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள், ராசிபலன் எழுதி இருக்கிறேன் ! மேலே உள்ள menu வழியாக பாருங்கள், அல்லது இங்கு கீழே இந்த வார்த்தையில் அதற்கான லிங்க் உள்ளது அதனைத் தொட்டும் உங்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்ளலாம் .
இதோ இந்த வார்த்தையை தொடுங்கள் . ( சனிப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி முதல் மீன ராசி வரை ,
சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை )

இந்த website இல்

( https://snganapathiastrologer.com/ ) ஏற்கனவே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் . அந்தப் பதிவையும் பாருங்கள் .

1) கடிகார பிரசன்னம் பார்ப்பது எப்படி ?
2) திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?
3) நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி ?

ஜாதக பலன் ஆலோசனை

என்னிடம் தொலைபேசி வழியே ஜாதக பலன் ஆலோசனை பெற விரும்புபவர்கள். என்னை இந்த தொலைபேசி எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். அதாவது தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு உங்களுக்கான ஜாதக பலனை தொலைபேசி வழியாகவே தெரிந்து கொள்ளலாம் ! தொடர்புக்கு : Phone Call 97 42 88 64 88, What’s up 97 42 88 64 88

அனைத்து ராசியினருக்கும் ஒரு முக்கிய குறிப்பு :

சனிப்பெயர்ச்சி என்பது 40 சதவீதம் ஒரு ஜாதகருக்கு வேலை செய்யும் !, மீதமுள்ள 60% பலனானது அந்த ஜாதகரின் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் ! என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் . இருப்பினும் இந்த ராசி பலனும் மிக முக்கியம் , ஜாதக பலன் அதைவிட மிக மிக முக்கியம் !

எல்லா வளமும் நலமும்

இந்தப் பதிவை பொறுமையாக படித்த உங்களுக்கு, ஆண்டவன் எல்லா வளமும் நலமும் செல்வம் பொருள் உங்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் !
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வாஸ்து specialist S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88to 2027 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ஜாதகம் பார்க்க படிக்க தொடர்பு கொள்ளுங்கள
Call Us for Horoscope Predict