SN கணபதி ஜோதிடர்

நீங்கள் ஜோதிடம் கற்க இந்த தளம் ஒரு முழுமையான வழிகாட்டி !

Whats up :
95 85 88 80 87

97 42 88 64 88

அன்புடையீர் வணக்கம் நான் உங்கள் ஜோதிஷ வித்யாபதி S.N. கணபதி B.Lit, M.A. D.Astro

ஜோதிட பாடங்களை கற்க விரும்பும் தங்களை, என்னுடைய இந்த இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் !

நீங்கள் இந்த இணையதளம் வாயிலாகவோ அல்லது என்னிடம் What’s Up வழியாகவோ ஜாதக பாடங்களைப் பெற்று ஜாதகத்தை முறையாக படிக்கலாம் ! மேலும் ஜோதிட பாடத்தில் எப்படி இணைவது என்பது பற்றி அறிய என்னை whats Up வழி  தொடர்பு கொள்ளுங்கள் ! அல்லது நேரடியாக தொலைபேசி வழி அழையுங்கள் ! Ph : 95 85 88 80 87, Ph : 97 42 88 64 88

மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.

நாங்கள் வழங்கும் படிப்புகள்

அடிப்படை , உயர்நிலை, முதுநிலை, திருமண பொருத்தம்

பார்க்கும் முறைகள், முதலிய பாடங்களையும், மேலும் 

பல்வேறு நிலைகளில் இங்கு ஜோதிட பாடங்களை

நீங்கள் தெளிவாக கற்று கொள்ள முடியும் ! இந்த இணையதளம் வாயிலாகவோ அல்லது என்னிடம் வாட்ஸ் அப் வழியாகவோ ஜாதகம் படித்து முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் !

உயர்நிலை ஜோதிட பாடங்கள்

முதுநிலை ஜோதிட பாடங்கள்

Coming soon..

அடிப்படை ஜோதிட பாடங்கள்

Coming soon..

திருமண பொருத்தம் பார்க்கும் முறை ! - சிறப்பு ஜோதிட பாடங்கள்!

Coming soon..

ஜோதிடத்தில் உள்ள சூட்சுமங்களை ஒளிவு மறைவு இன்றி இந்த இணையதளத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம் ! இதோ பாடங்களின் விவரங்கள் !

பாரம்பரிய ஜோதிட முறை, பிரசன்ன ஜோதிட முறை, ஜோதிட கணித முறைகள் முதலிய ஜோதிட பாடங்களை தெளிவாக கற்று தருகிறேன் !

“தெளிவாக ஜாதக பலன் காணும் முறைகள் ” எனும் இந்த ஜோதிட பாடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ! நான் உங்கள் ஜோதிஷ வித்தியாபதி S.N. கணபதி B.Lit, M.A, D.Astro

“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் “, என்கிற அடிப்படையிலே ஜோதிடமும் எண் கணிதமும் இணைந்தது ஒரு மிக உயர்ந்த சாஸ்திரமாகும் ! இதனோடு வாஸ்துவையும் இணைத்து பார்க்கும் போது மேலும் பலம் கூடும் . ( பாரம்பரிய ஜோதிடம் எண் கணிதம் வாஸ்து )

ஜாதக பலன் காணும் முறைகளில் நீங்கள் படிக்க இருக்கும் பாடங்களின் விவரங்கள் !
1) பாவகம் பெறும் வலிமையால் நிர்ணயிக்கும் பலன்கள்

2) இந்த பாவக வலிமையை பத்து நிலைகளில் அறியும் நிலை பற்றி சொல்லி இருக்கிறேன் .

3) தசா புத்தி பலன்களை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.
4) திசா புத்தி சூட்சுமம் அந்திரம் கொண்டு எவ்வாறு பலன் எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும் .

5) இயங்கும் பாவகங்களால் நிர்ணயிக்கப்படும் பலன்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும் .

6) ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால்.. முதல் பாவகம், இரண்டாவது பாவகம், மூன்றாம் பாவகம், நான்காம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஆறாம் பாவகம் , ஏழாம் பாவகம் , எட்டாம் பாவகம் , ஒன்பதாம் பாவகம் , பத்தாம் பாவகம் பதினொன்றாம் பாவகம் , பன்னிரண்டாம் பாவகம் , ஆகிய பன்னிரு பாவகங்களை பற்றி தெளிவாக ஆய்வு செய்யும் விதம் பற்றி சொல்லி இருக்கிறேன் . என்னிடம் நீங்கள் அனைத்து விதமான ஜோதிட பாடங்களை தெளிவாக கற்றுக்கொள்ள முடியும் !

7) ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகம் .. எந்த அளவிற்கு பலம் பெறுகிறது என்பதை பற்றி நீங்கள் இந்த ஜோதிட பாடங்களில் தெரிந்து கொண்ட பிறகு, ஜாதக பலன் எளிமையாக உங்களால் சொல்ல முடியும் !

8) ஜோதிட ரீதியாக உங்களுக்கு ஏதேனும் கேள்வி ஏற்பட்டால் என்னை whatsup வழி தொடர்பு கொள்ளுங்கள் ! What’s up 95 85 88 80 87, Ph : 9742886488

9) ஒரு பாவகாதிபதி கேந்திர திரிகோணங்களில் இருப்பது நல்லது ! அதாவது கேந்திர ஸ்தானம், திரிகோண ஸ்தானம், பணபரஸ்தானம் , ஆகிய ஸ்தானங்களில் ஒரு பாவகாதிபதி இருப்பது விசேஷம் !
அதேபோன்று ஒரு பாவகாதிபதி ஆட்சி உச்சம் நட்பு பெறுவது நல்லது !

அடுத்து அதே பாவக அதிபதி பரிவர்த்தனை , வர்கோத்தமம் , பெறுவதும் நல்லது . அதாவது அந்த கிரகம் வலிமை பெறுவதாக அர்த்தம் .
இன்னொரு முக்கியமான விஷயம் பாவகாதிபதி திதிசூன்யம் அடையாமல் இருப்பது மிக அவசியம் ! மேற் சொன்ன விவரங்களை தெளிவாக ஜோதிட பாடங்களில் கரும்பலகையில் ( or white board ) எழுதி பாடங்களை தெளிவாக விளக்கி இருக்கிறேன் . பாடங்களை முழுமையாக கவனமாக பார்த்து குறிப்பு எடுங்கள் .
ஒரு பாவகாதிபதி மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்லதா ? என்றால் நல்லது இல்லை . பாவகாதிபதி பகை நீசம் பெறுவது நல்லது இல்லை . பாவகாதிபதி அஸ்தமனம் , கிரக யுத்தத்தில் தோற்பது நல்லது இல்லை . பாவகாதிபதி இயற்கை பாவியாகி வக்ரம் பெறுவது நல்லது இல்லை.

10 ) லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும் . லக்னம் என்பது முதல் பாவகம் ஆகும் . ஒரு ராசி கட்டத்தில் லக்னம் எங்கு இருக்கிறதோ அதிலிருந்து தான் பாவகங்களை கணக்கிட வேண்டும் .
உதாரணம் ஒருவருக்கு ரிஷப லக்னம் என்றால் .. ரிஷப ராசி தான் முதல் பாவகம் அல்லது முதல் வீடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் . ( பாவகம் என்றாலும் வீடு என்றாலும் இங்கு ஜோதிடத்தில் ஒரே அர்த்தத்தை குறிக்கும் ) அதனைத் தொடர்ந்து மிதுன ராசி தான் இரண்டாம் பாவகம் ஆகும். அடுத்து கடக ராசி மூன்றாம் பாவகம் ஆகும். அடுத்து சிம்ம ராசி நான்காம் பாவகம் ஆகும்.

அடுத்து கன்னி ராசி ஐந்தாம் பாவகம் ஆகும் . அடுத்து துலாம் ராசி ஆறாம் பாவகம் ஆகும். விருச்சக ராசி ஏழாம் பாவகம் ஆகும். தனுசு ராசி எட்டாம் பாவகம் ஆகும். மகர ராசி ஒன்பதாம் பாவகம் ஆகும். கும்ப ராசி பத்தாம் பாவகம் ஆகும். மீன ராசி 11 ஆம் பாவகம் ஆகும் . மேஷ ராசி 12-ஆம் பாவகம் ஆகும்.

இதுபோன்று லக்னம் எந்த ராசியில் விழுகிறதோ அதனைக் கொண்டு பாவகம் கணக்கிடப்பட வேண்டும்.

1 ஆம் பாவகம் ஜாதகரின் நிறம் குணம் தோற்றம் செயல்பாடுகளைக் குறிக்கும்,
2 ஆம் பாவகம் வாக்கு ஸ்தானம் ஆகும் ,
3 ஆம் பாவகம் தைரிய வீரிய ஸ்தானம் ஆகும் ,
4 ஆம் பாவகம் மாத்ரு ஸ்தானம் ஆகும் . அதாவது தாய் மற்றும் வீடு பற்றி அறியும் பாவகம் ஆகும் , 5 ஆம் பாவகம் புத்திர ஸ்தானம் ஆகும் , குழந்தை பாக்கியம் ,
6 ஆம் பாவகம் ருண ரோக ஸ்தானம் ஆகும் அதாவது நோய் கடன் எதிர்ப்புகளைப் பற்றி குறிக்கும் பாவகம் .
7 ஆம் பாவகம் களத்திர ஸ்தானம் ஆகும் . கணவன் அல்லது மனைவி பற்றி குறிக்கும் பாவகம். கூட்டுத் தொழிலை குறிக்கும் , பங்குதாரர்களை குறிக்கும் , நண்பர்களைக் குறிக்கும் , பங்குதாரர் நண்பர்கள் காரகத்துவங்கள் ஆகும் .
8 ஆம் பாவகம் ஆயுள் ஸ்தானம் ஆகும் , 9 ஆம் பாவகம் தந்தை ஸ்தானம் ஆகும் அதாவது பித்ரு ஸாதானம் , 10 ஆம் பாவகம் தொழில் ஸ்தானம் ஆகும் , கர்ம ஸாதானம் ஆகும் , 11 ஆம் பாவகம் லாபஸ்தானம் ஆகும் , மூத்த சகோதரர் மூத்த சகோதரி ஆகியோர்களை குறிக்கும் , 12 ஆம் பாவகம் அயன சயன போக ஸ்தானம் ஆகும் . மேலும் விரைய ஸ்தானம் ஆகும் . லாபம் என்பது பதினோராம் பாவகம் ஆகும் . விரையத்தையும் லாபமாக மாற்றுவது எப்படி என்பதை பற்றியும் தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் .

மேலும் ஒவ்வொரு பாவகத்தின் காரகாதிபதிகளையும் இந்த ஜோதிட பாடத்தில் தெரிந்து கொள்ள போகிறீர்கள் .
காரகாதிபதி பற்றியும் அறிந்து பலன் எவ்வாறு சொல்ல வேண்டும் என்பது பற்றி கற்றுக் கொடுத்திருக்கிறேன் .

11) நவாம்சத்தைக் கொண்டு எப்படி பலன் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். நவாம்சம் மிக முக்கியம்.
மேலும் சாரநாதன் என்றால் என்ன எவ்வாறு பலன் எடுக்க வேண்டும் என்று விளக்கி இருக்கிறேன் !
திரிகோண ஸ்தானம், கேந்திர ஸ்தானம், மறைவு ஸ்தானம், பணபரஸ்தானம் பற்றி சொல்லி இருக்கிறேன் . பாவக ஆய்வு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஜோதிட விதிமுறைகளை தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக பாருங்கள் . திசா நாதன் நின்ற நட்சத்திர நாதன் பற்றி பாடத்தில் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் . புத்திநாதன் நின்ற நட்சத்திர நாதன் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் . திசா புத்தி அந்திரம் சூட்சுமம் பற்றி தெளிவாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

12 ) திருமண பொருத்தத்தில் , விவாதம் தொடர்பான தோஷங்கள் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறேன் .
செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , அதாவது சர்ப தோஷம் , கால சர்ப்ப தோஷம் , சனி தோஷம் , கிரக இணைவுகளால் ஏற்படும் தோஷங்கள் , களத்திர தோஷம் , புத்திர தோஷம் அல்லது புத்திர சோகம் , விஷ கன்னிகா தோஷம் , புனர்பூ தோஷம் ஆகிய தோஷங்கள் பற்றி தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் .

உயர்நிலை ஜோதிட பாடங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் .. அடிப்படை ஜோதிட பாடங்களை தெளிவாக கற்று இருக்க வேண்டும் . அதில் முக்கியமாக 12 ராசிகள் விவரம் , 27 நட்சத்திரங்கள் விவரம் , ஒன்பது கிரகங்கள் விவரம் , 108 நட்சத்திர பாதங்கள் விவரம் , கிரகங்களின் தன்மைகள் , பஞ்சாங்கம் விளக்கங்கள் , ஜாதக கணித முறைகள் , பாவக காரகத்துவம் , கிரக காரகத்துவம் , பன்னிரு பாவகங்களில் ஸ்தான விவரங்கள் , ஜோதிட சொல் விளக்கம் , பன்னிரு லக்னங்களுக்கு சுபர் பாவர் அரியும் முறை , பாவக அதிபதிகள் பன்னிரு பாவங்களில் நிற்கும் நிலை , கிரகங்கள் பன்னிரு பாவகங்களில் நிற்கும் பலன்கள் , லக்னப் பொதுப் பலன்கள் , ராசி பொது பலன்கள் பற்றி அடிப்படையில் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் , இதே வெப்சைட்டில் அடிப்படை ஜோதிட பாடங்கள் இருக்கிறது !

உயர்நிலை ஜோதிட பாடங்கள் முடித்த பிறகு முதுநிலை பாடங்களில் இணைந்து முழுமையாக ஜோதிட பாடங்களை நீங்கள் கற்க முடியும் . வெற்றிலை பிரசன்னம் , சந்திரநாடி முறை , கிரக இனைவுகளால் ஏற்படும் பலன்கள் , நாடி முறையில் பலன் காணும் வரை , மேலும் துல்லியமாக பலன் காணும் முறைகள் பற்றி ஜோதிட பாடங்களில் சொல்லி இருக்கிறேன் !

அடிப்படை ஜோதிட பாடத்தில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் !

12 ராசிகள்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் .

27 நட்சத்திரங்கள்
அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

108 பாதங்கள் இடம்பெறும் ராசிகள் , என அடிப்படை நிலையில் முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் .

அப்படி அறிந்தவர்கள் இங்கு உயர்நிலை வகுப்பை தெளிவாக கற்றுக் கொள்ள முடியும் ! ஜோதிட பாடத்தில் நீங்கள் தலைசிறந்து விளங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ! குருவே சரணம் !

மேலும் இந்த இணையதளத்தில் ஜோதிடம் படிக்கும் மாணவர்கள் ஜோதிட ரீதியான சந்தேகங்களை கேட்க தொடர்புக்கு what’s up : 95 85 88 80 87

மேலும் என்னிடம் தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க இதே whatsup நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் !

  • what’s up : 95 85 88 80 87 or 97 42 88 64 88

முக்கிய குறிப்பு :
இந்த இணையதளம் வாயிலாகவோ அல்லது என்னிடம் வாட்ஸ் அப் வழியாகவோ ஜாதகம் படித்து முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் !

ஜோதிஷ வித்யாபதி S.N.கணபதி B.Lit, M.A, D.Astro ஜோதிடர் , ஜோதிட ஆலோசகர், எண் கணித நிபுணர் ! பிரசன்ன ஜோதிடர்!

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் முன்னோர் வாக்கு ! ”
அது போல் ஜோதிடமும் எண் கணிதமும்
இரு கண்களைப் போன்றது ! ” ஜோதிடர் வாக்கு

எங்கள் மாணவர்களின் கருத்து

Students reviews

சிறந்த ஜோதிட ஆலோசகர்

ஜோதிஷ வித்யாபதி திரு S.N. கணபதி அவர்கள் உடனான எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர் ஜோதிடத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர், திறமையானவர். முழு வாழ்க்கையும் ஜோதிடத்திற்காக அர்ப்பணித்து செயல்படுபவர் .

ராஜகோபால் வாஸ்து நிபுணர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் பெங்களூரு

சிறந்த எண் கணித நிபுணர்​

இவர் எண் கணிதத்துறையிலும் நன்கு புலமை பெற்றவர். இவர் ஜோதிடத்தை, எளிமையாக அனைவருக்கும் புரியும் விதமாக சொல்லிக் கொடுப்பது இவருடைய தனி சிறப்பு

ஆனந்த ஜோதிட மாணவர்

ஜோதிடத்துறையில் புலமை வாய்ந்தவர்

முழு வாழ்க்கையும் ஜோதிடத்திற்காக அர்ப்பணித்து செயல்படுபவர் . அனைவருக்கும் ஜோதிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஜோதிட வகுப்புகளையும் youtube, blog மற்றும் வலைதளம், மூலமாக ஜோதிடம் சம்மந்தமான சூட்சுமங்களை ஒளிவு மறைவு இன்றி சொல்லி தருபவர் !.

Gold Siva ஜோதிட மாணவர்

நேர்மையும் நம்பகத் தன்மையும் உடைய சிறந்த ஜோதிட ஆசிரியர்

நேர்மையும் நம்பகத் தன்மையும் உடைய சிறந்த ஜோதிட ஆசிரியர் முழு வாழ்க்கையும் ஜோதிடத்திற்காக அர்ப்பணித்து செயல்படுபவர் . மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதில் கூறுபவர் ! இவரிடம் தெளிவாக ஜோதிடம் கற்றுக் கொண்டேன் ! தற்போது நானும் ஜோதிட சேவை பணியாற்றிக் கொண்டு வருகிறேன் ! ஐயா அவர்கள் என்னை சிறந்த ஜோதிடராக தேர்ச்சி பெற வைத்துள்ளார் !

Thanigaivel Astrologer

ஜோதிட பாடங்கள் தொடர்பான , சிறப்புச் சலுகைகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற விரும்புகிறீர்களா ?

உங்கள் ராசிக்கான விவரங்கள்

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

சிவப்பு , மஞ்சள்

மேஷம் , சிம்மம், தனுசு ராசிக்காரர்கள்

செண்பகம்

வைத்தீஸ்வரன் கோயில்

நடுத்தரமான உயரம் உள்ளவர்கள். நல்ல உடல் கட்டு உடையவர்கள். சிவந்த விழிகளை கொண்டவர்கள். உஷ்ண தேகம் கொண்டவர்கள். எடுத்த விஷயத்தை கடைசி வரை போராடி ஒரு முடிவுக்கு கொண்டு வருபவர்கள். தன்னைக் கண்டு பயப்படக்கூடிய எதிரிகளை அதிகம் கொண்டவர்கள். தனக்கு ஒருவர் நன்மை செய்கிறார் என்றால் அவருக்காக எந்த நல்லதும் செய்வார்கள். சுருக்கமாக பேசி எளிதில் புரிய வைக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு மன தைரியம் அதிகம். ஆனால் விட்டுக் கொடுக்கும் தன்மை இவர்களிடம் குறைவு. வாழ்க்கையில் எப்படியும் போராடி வெற்றி பெறக் கூடியவர்கள் !

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

வெண்மை நிறம் , பச்சை

ரிஷபம் , கன்னி ராசிக்காரர்கள்

 தெற்கு 

வெண்தாமரை

இந்திராணி

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

பச்சை, வெண்மை நிறம்

மிதுனம், துலாம், கும்பம் ராசிக்காரர்கள்

வெண்காந்தள்

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

சாம்பல் நிறம் , மஞ்சள்

கடகம் , விருச்சிகம் , தனுசு ராசிக்காரர்கள்

வெள்ளரளி

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

இளம் சிகப்பு, மஞ்சள்

சிம்மம், தனுசு, மேஷம் ராசிக்காரர்கள்

கிழக்கு 

செந்தாமரை

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

பச்சை, வெண்மை நிறம்

கன்னி, மகரம், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள்

 தெற்கு 

வெண்காந்தள்

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

பச்சை, வெண்மை நிறம்

துலாம் , கும்பம், மிதுனம் ராசிக்காரர்கள்

வெண்தாமரை

இந்திராணி

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

சிவப்பு , மஞ்சள்

விருச்சிகம் , தனுசு, சிம்மம் , ராசிக்காரர்கள்

செண்பகம்

வைத்தீஸ்வரன் கோயில்

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

மஞ்சள், இளஞ்சிவப்பு

தனுசு, மேஷம் , சிம்மம் ராசிக்காரர்கள்

கிழக்கு 

புஷ்பராகம்

இந்திரன்

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

வெந்நிறம் , பச்சை

மகரம் , ரிஷபம் , கன்னி, ராசிக்காரர்கள்

 தெற்கு 

கருங்குவளை

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

மஞ்சள், பச்சை, வெண்மை நிறம்

கும்பம், மிதுனம் , மீன ராசிக்காரர்கள்

கருங்குவளை

உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் தன்மைகள் விவரங்கள்

மஞ்சள், வெண்மை நிறம்

மீனம், கடகம், விருச்சிகம் ராசிக்காரர்கள்

புஷ்பராகம்

இந்திரன்