Guru peyarchi 2025 in tamil | குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் | குரு பெயர்ச்சி 2025 to 2026

குரு பெயர்ச்சி 2025 to 2026 | குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் | Guru peyarchi 2025 in tamil

விசுவாசு தமிழ் வருடம் சித்திரை 31 ஆம் தேதி கிரக நிலை. ( திருக்கணிதம் )

 ஆங்கிலம் 14/05/2025 இரவு 10:37 குரு பெயர்ச்சி 2025 to 2026

( Guru peyarchi 2025 in tamil ) மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி மற்றும் மீன ராசி. குபேர யோகம் இந்தப் பனிரெண்டு ராசிகளில் எந்த ராசிகள் பெறப்போகிறது. இப்போது பார்க்கலாம்.

முக்கிய குறிப்பு: 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை ஏற்கனவே இதே Website இல் https://snganapathiastrologer.com/கொடுத்திருக்கிறேன் பாருங்கள். (Follow our SN Ganapathi Astrologer Tamil Website)

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

மேஷ ராசி நேயர்களே ! இதுவரைக்கும் இரண்டிலிருந்த குருபகவான் தற்போது (2025 இல்) மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். 2025 மே மாதத்திற்குள் உங்கள் திட்டங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு குரு பெயர்ச்சி நற்பலன்கள் கொடுக்காது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் விஷயம் குரு பெயர்ச்சிக்கு முன் செய்து விடுங்கள். ( 2025 மே மாதம் ஆரம்பிப்பதற்குள்) 

2025 மே மாதத்தில் இருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அனுகூலம் இல்லை. மேலும் ஏழரை சனி ஆரம்பம் வேறு. எனவே உங்களை படாத பாடு படுத்தி விடும். கிட்டத்தட்ட 2027 வரை தொந்தரவு உள்ளது. எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. மேலும் உங்கள் ஜென்ம ராசிக்கான விரிவான பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். குரு பெயர்ச்சி 2025 to 2026 வரைக்கும் கவனம் தேவை.

உங்கள் ஜனன கால தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு நன்மை கொடுக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள். இதே பதிவில் சனி பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அதனை பாருங்கள்.

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

 ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குபேர யோகத்தை கொடுக்கும். 2025 வரைக்கும் ஜென்ம ராசியில் இருக்கும் குரு பகவான் 2025 மே மாதத்திற்கு பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். பண வரவு அதிகரிக்கும். செல்வ செழிப்பு ஏற்படும். வீடு வாகன யோகம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். 

இது ஒரு அற்புதமான காலகட்டம். நல்ல நேரம் வரும்பொழுது இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. இனி எல்லா அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த குரு பெயர்ச்சி பலன்களை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். உங்கள் ராசிக்கான விரிவான குரு பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இதே பதிவில் சனி பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அதனை பாருங்கள். எந்த ஒரு புதிய விஷயத்திற்கும் ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

மிதுன ராசி நேயர்களே ! 2025 மே வரை குரு பகவான் 12 ல் இருப்பார். 2025 ஜூன் மாதம் பிறகு ராசியிலே குரு வருவார். அதாவது உங்கள் மிதுன ராசியில் குரு பெயர்ச்சி ஆகிறார். இது ஜென்ம குரு ஆகும். ஜென்ம குரு நல்லது இல்லை. இது நல்ல அனுகூலம் கொடுக்காது. உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு நன்மை தரும். ஜாதக ரீதியாக நன்றாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும். 

ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லை என்றால்,  நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்ய வேண்டும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. திருமணம் தாமதப்படும். வேலை உத்தியோகத்தில் தொந்தரவு ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். அடுத்த குரு பெயர்ச்சி வரை நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 2025 முதல் 2026 வரை. மேலும் விரிவாக உங்களுக்கான பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். ஏற்கனவே இதே website இல் சனி பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அதனை பாருங்கள்.

கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

கடக ராசி நேயர்களே! 2025 மே மாதம் வரைக்கும் 11 இல் இருந்த குரு பகவான் 12 இல் பெயர்ச்சி ஆகிறார். பனிரெண்டாம் வீடு என்பது விரைய ஸ்தானமாகும். இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு சுப விரயங்களை கொடுக்கும். சற்று கவனமாக இருந்தால் வீடு வாகனம் பொருள் சேர்த்துக் கொள்ளலாம். செலவுகளை நல்ல விஷயங்களுக்கு மூலதனமாக திட்டமிட்டு செய்யுங்கள். பண வரவு அதிகரிக்கும். அதே சமயம் சுப செலவும் ஏற்படும். சரியான முறையில் திட்டமிட்டு பணத்தை செலவு செய்யுங்கள். 

திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் கைகூடும். ஆனால் சிரமத்தின் பேரில் நடக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பணம் கொடுத்தால் திரும்ப வராது. கடன் அதிகம் வாங்கினால் திரும்ப செலுத்த முடியாது. எனவே இந்த காலகட்டத்தில் கவனமாக இருங்கள். 2025 முதல் 2026 வரை கவனம் தேவை. தொழில் வேலை விஷயங்கள் நன்றாக இருக்கும். மேலும் உங்களுக்கான விரிவான குரு பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இதே website இல் ஏற்கனவே சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அதனையும் படியுங்கள். வாழ்த்துக்கள்.

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

சிம்ம ராசி நேயர்களே! 2025 பிறகு உங்களுக்கு குபேர யோகம் ஏற்படப்போகிறது. 2025 மே மாதம் வரை குரு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். 2025 மே மாதம் பிறகு 11 வது வீட்டில் சஞ்சரிப்பார். அதாவது பத்தாம் வீட்டிலிருந்து பதினோராம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ஜென்ம ராசி அடிப்படையில் 11-ம் வீடு லாப ஸ்தானமாகும். இந்த லாப ஸ்தானத்திலே குரு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு குபேர யோகம் ஏற்படும். 

திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். வருமானம் உயரும். மதிப்பு மரியாதை கூடும். பத்தாம் வீட்டு குரு உங்களுக்கு நன்மை செய்யவில்லை. இனி பதினோராம் வீட்டு குரு உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 

சொந்த தொழில் செய்ய உங்கள் ஜாதகத்தில் அந்த அமைப்பு உள்ளதா என்று பார்த்து செயல்படுங்கள். இல்லையென்றால் உத்தியோகத்திற்கு செல்வதே நல்லது. அரசு மற்றும் அரசு துறை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும் விரிவான குரு பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இதே website இல் ஏற்கனவே சனி பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன். உங்களுக்கான அந்த சனி பெயர்ச்சி பலன்களையும் படியுங்கள். வாழ்த்துக்கள்.

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

கன்னி ராசி நேயர்களே! நல்ல யோகத்தை கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது பத்தாம் வீட்டிற்கு செல்கிறார். கவலைப்பட வேண்டாம். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால், எப்போதும் போல் நன்மைகள் நடக்கும்.‌ 2025 மே மாதம் வரை ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் இருப்பார். 2025 மே மாதம் பிறகு 10-ம் வீட்டிற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். அதாவது உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். 

2025 ஜூன் மாதம் பிறகு பொருளாதார விஷயத்தில் நீங்கள் கவனமாக இருந்தே ஆக வேண்டும். அஜாக்கிரதையாக இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள், ஊர் பெரியவர்கள் மத்தியில் நன்மை இருக்காது. உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். முக்கியமாக வேலை செய்யக்கூடிய இடத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல காலம் கிடையாது. புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில், சில நன்மைகள் உங்களுக்கு நடக்கும். 

உங்களுக்கான முழு குரு பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இதே website இல் சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அந்தப் பதிவையும் படியுங்கள். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

துலாம் ராசி நேயர்களே! உங்களுக்கு தாராளமான பணப்புழக்கம் ஏற்படப்போகிறது. குபேர யோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும். 2025 மே மாதம் வரை அஷ்டம குருவாக குரு இருப்பார். அதாவது எட்டாம் வீட்டில் இருப்பார். உங்கள் ஜென்ம ராசி படி ஒன்பதாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். ஒன்பதாவது வீட்டிற்கு குரு பெயர்ச்சியான பிறகு பொருளாதாரம் உயரும். (குரு ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்) 

வீடு வாகன யோகம் ஏற்படும். நினைத்த விஷயங்கள் கைகூடும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும். பூர்வீக சொத்து கிடைக்கும். உங்கள் சுய ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த குரு பெயர்ச்சி பலன்களை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல யோகமான காலம். 

வேலை உத்தியோகத்தில் வருமானம் உயரும். பதவி உயர்வு ஏற்படும். கௌரவம் புகழ் கிடைக்கும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் உங்களுக்கான விரிவான குரு பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இதே website இல் சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதி இருக்கிறேன் அந்தப் பதிவையும் படியுங்கள். குபேர யோகத்தை அடையப்போகும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசி படி ஏழாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். அதாவது 2025 மே மாதம் வரை சஞ்சரிப்பார். அதன் பிறகு எட்டாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ஜென்ம ராசி படி எட்டாம் வீட்டு குரு அஷ்டம குருவாகும். இந்த காலகட்டம் உங்களுக்கு நன்மை தராது. மனதை தேற்றிக் கொள்ளுங்கள். ஏற்கனவே நல்ல விதமாக செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். அடுத்த இரண்டு வருடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் 2026 குரு பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை தராது. ஓரளவு தான் நன்மை தரும். ஏனென்றால் உங்கள் ஜென்ம ராசிக்கு 9 வது வீடு பாதகஸ்தானம் ஆகும். இது நன்மை தீமை கலந்து தரும். எனவே தான் இரண்டு வருடங்களுக்கு கவனமாக இருங்கள் என்று சொல்லுகிறேன். 

மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் சமாளித்து விடுவீர்கள். கடன் கொடுக்காதீர்கள். யாரிடமும் கடனும் வாங்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் வீண் பிரச்சனைகளை கொடுக்கும். தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள். மதிப்பு மரியாதை கிடைக்காது. எனவே புதியவரிடத்தில் பழகும் போது கவனமாக இருங்கள். உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் நன்மையாக நடக்கும். 

தெய்வ வழிபாடு செய்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த ஒரு புதிய முடிவுகளையும் ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தாமதம் ஆகும். தொழில் வேலை ஓரளவு சீராக செல்லும். புதிய தொழில் புதிய வேலை தான் உங்களுக்கு நன்மை தராது. மற்றபடி பழைய வேலையை தொடருங்கள். எந்த ஒரு புதிய முடிவுகளையும் 2027 பிறகு செய்யுங்கள். அல்லது உங்கள் பிறந்த தேதி நேரப்படி ஜாதகத்தைப் பார்த்து செயல்படுங்கள். மேலும் இதே website இல் சனி பெயர்ச்சி பலன்களையும் எழுதி இருக்கிறேன் அந்த பதிவையும் படியுங்கள். நீங்கள் கவனமாக இருந்து செயல்பட்டு வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

தனுசு ராசி நேயர்களே? உங்கள் ஜென்ம ராசி படி ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். அதாவது ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். 2025 மே மாதம் வரை ஆறாம் இடத்தில் குரு இருப்பார். அதன் பிறகு ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிவிடுவார். 2026 வரை ஏழாம் இடத்தில் குரு இருப்பார். இந்த ஒரு வருட காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் ஜென்ம ராசி படி ஏழாம் வீடு பாதகஸ்தானம் ஆகும். ஏழாம் வீட்டு குரு நன்மை தரும். இது பொதுவான விதி தான். அதே சமயம் உங்களுக்கு பாதகஸ்தானம் என்பதால் கவனம் தேவை. எந்தெந்த விஷயங்கள் கவனம் தேவை என்றால், முக்கியமாக பணம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. 

யாருக்கேனும் அதிகப்படியாக பணம் கொடுத்தால் திரும்ப வராது. கடன் அதிகமாக வாங்கினாலும் திரும்ப செலுத்த முடியாது. கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் பணம் சார்ந்த விஷயத்தில் செலவுகளை நீங்கள் குறைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பின்னர் வருத்தப்பட நேரிடும். உங்கள் சுய ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருந்தால் தப்பித்து விடுவீர்கள். இல்லையென்றால் பண விஷயத்தில் உங்களை யாராவது ஏமாற்ற தயாராக இருப்பார்கள் கவனம் தேவை. 

திருமணம் ஆகாதவர்களுக்கு சற்று திருமணம் தாமதப்படும், பிறகு திருமணம் கைகூடும். சுயதொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். பொருளாதார ரீதியாக தொந்தரவு ஏற்படும். புதிய கிளைகள் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். ஏற்கனவே செய்து கொண்டு இருக்கும் வேளையில் கவனம் செலுத்தினாலே போதும். அடுத்த இரண்டு வருடம் உங்களுக்கு குரு பெயர்ச்சி சிறப்பு இல்லை. 2026 குரு பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை தராது.

 உங்களுக்கான சனி பெயர்ச்சி பலன்களை இதே website இல் எழுதி இருக்கிறேன். அதனையும் ஒரு முறை படித்து செயல்படுங்கள். மேலும் உங்களுக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்கள் அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். நீங்கள் கவனமுடன் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

மகர ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த குரு பகவான், ஆறாம் இடத்திற்கு மாறுகிறார். இது நல்ல அமைப்பா என்றால் நல்ல அமைப்பு இல்லை. ஐந்தாம் இடத்தில் குரு அவருடைய பார்வை ராசி மீது விழும். எனவே 2025 மே மாதம் வரை உங்களுக்கு நல்ல ஏற்றும் நல்ல அனுகூலமே. 2025 மே மாதம் பிறகு குருவின் பார்வை ராசி மீது விழாது. இதற்கான பலன் என்னவென்றால்?, பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் பெரிய ஏற்றம் இருக்காது. எதிர்பார்த்த மதிப்பு மரியாதை குறையும். 

வீட்டில் சுப நிகழ்வு தாமதப்படும். புதிதாக எந்த விஷயத்தையும் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கவும் கூடாது. 2025 மே மாதம் முதல் ஒரு வருடம். 2026 இல் குரு பெயர்ச்சிக்கு பிறகு நன்மை ஏற்படும். அதுவரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும். மிதுனத்தில் குரு பகவான் இருக்கும் வரை, நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தாமதப்படும். வெற்றி வாய்ப்புகள் தாமதப்படும். புதிய திட்டங்களை ஒத்தி போட வேண்டும். 2026 ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டும். 

2025 ஜூன் மாதத்திற்குள் புதிய விஷயங்களை ஆரம்பிப்பது நல்லது தான். அதன் பிறகு ஆரம்பிக்க வேண்டாம். முன்னதாகவே ஆரம்பித்து செயல்படுங்கள். நல்ல நேரத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பித்து விட்டால் அதைத் தொடர்ந்து செய்யலாம். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் ஓரளவு சமாளித்து விடலாம். குரு பெயர்ச்சியும் தசா புத்தியும் ஒரு சேர நன்றாக இருக்கும் போது வாழ்க்கையில் ஏற்றமே. கோச்சாரம் சரியில்லாமல் தசா புத்தி மட்டும் சிறப்பாக இருந்தால் 50% நன்மை 50% தீமை கலந்து நடக்கும். புதிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுக்கும் பொழுது ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள். 

என்னுடைய இதே website இல் சனிப்பெயர்ச்சி பலன்களும் சொல்லி இருக்கிறேன். அந்தப் பதிவுகளையும் படியுங்கள். மேலும் முழு ராசி பலன்களை இந்த வெப்சைட்டில் தொடர்ந்து எழுத இருக்கிறேன். எனவே தொடர்ந்து படியுங்கள்.

கும்ப ராசி பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

கும்ப ராசி நேயர்களே! மிதுனத்தில் குரு இருக்கும் வரை உங்களுக்கு யோகம் அடிக்க போகிறது. குபேர யோகம் கிடைக்கப் போகிறது. பொருளாதாரம் உயரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். வசதி வாய்ப்புகள் அதிகமாகும். நினைத்த விஷயங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சி பலன்களை பரிபூரணமாக நீங்கள் அனுபவிக்க முடியும். 

திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தவர்களுக்கு திருமணம் கைகூட போகிறது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல அருமையான காலகட்டம். ஆனால் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அதேபோல் சொந்தமாக தொழில் செய்யக்கூடிய யோக அமைப்பும் உங்கள் ஜாதகத்தில் இருக்க வேண்டும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். தற்காலிகமாக வெளியூர் பயணம் ஏற்படும். உங்களுக்கு சாதகமாகவும் அமையும். செலவுகளை மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. கோச்சாரம் நன்றாக இருக்கிறது. அதேபோல் தசா புத்தியும் நன்றாக இருக்கும் பட்சத்தில், சாதகமான சூழல் ஏற்படும். எனவே புதிய முயற்சிகளை செய்வதற்கு முன் ஜாதகத்தை ஒரு முறை பார்த்து நல்ல நேரம் பார்த்து ஆரம்பிங்கள்.

இதே website இல் சனி பெயர்ச்சி பலன்களும் எழுத இருக்கிறேன் படியுங்கள். மேலும் தொடர்ந்து உங்கள் ராசிக்கான ராசி பலன்களை எழுத இருக்கிறேன் தொடர்ந்து படியுங்கள்.

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (குரு பெயர்ச்சி 2025 to 2026)

மீன ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான், நான்காம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மூன்றாம் இடத்து குருவால் அந்த அளவுக்கு பெரிய நன்மை சொல்லும்படி எதுவும் இல்லை. குரு பெயர்ச்சிக்கு பிறகு நான்காம் இடத்து குருவும் அந்த அளவுக்கு பெரிய பலன்கள் கொடுக்காது. 2025 மே மாதம் பிறகு ஒரு வருடத்திற்கு நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும். பெரிய ஏற்றம் எதுவும் நடக்காது.  எந்த விஷயமும் சாதாரணமாகத்தான் நடக்கும். எனவே புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். 2026 இல் குரு பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு நன்மைகள் நடக்கும். அதுவரை பண விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

செய்து கொண்டிருக்கும் வேலையை தொடர்ந்து செய்ய முயற்சி செய்யுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று தாமதமாகும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாக இருக்காது. அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் தாமதப்படும். 2026 க்கு பிறகு திருமணம் நடக்கும். ஒருவேளை உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால், ஒரு சில நன்மைகள் உங்களுக்கு நடக்கும். 

புதிய முயற்சிகளை செய்வதற்கு முன் ஜாதகம் பார்த்து செயல்படுங்கள். பெரிய பணத்தொகை சார்ந்த விஷயங்கள் பற்றி முடிவு எடுக்கும் பொழுது ஜாதகம் பாருங்கள். ஜாதகம் பார்த்து செயல்பட்டால் சங்கடங்களை தவிர்க்கலாம். என்னுடைய இதே வெப்சைட்டில் சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி எழுதி இருக்கிறேன். அந்த பதிவுகளையும் படியுங்கள். மேலும் உங்கள் ராசிக்கான ராசி பலன்கள் தொடர்ந்து இங்கு எழுத இருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

ஜாதக பலன் பார்க்க

என்னிடம் தொலைபேசி வழி ஜாதக பலன் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய இந்த தொலைபேசி எண்ணில் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் Ph : 97 42 88 64 88, what’s up 95 85 88 80 87

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ஜாதகம் பார்க்க படிக்க தொடர்பு கொள்ளுங்கள
Call Us for Horoscope Predict