திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? பகுதி – 1 | மிகச்சிறந்த முறை ! | Marriage matching

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? திருமணப் பொருத்தத்தில் , லக்னப் பொருத்தம் மற்றும் ஜென்ம ராசி பொருத்தம் பார்க்கும் முறை !

  பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திரப் பொருத்தம் பார்த்துவிட்டு ஜாதக ரீதியான கிரக பொருத்தம் என்று சொல்லக்கூடிய ஜாதக பொருத்தத்தையும் தெளிவாக பார்த்து திருமணப் பொருத்தத்தை முடிவு செய்ய வேண்டும் .

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தையும் ஆணுடைய ஜாதகத்தையும் பொருத்தத்திற்கு எடுக்கும் பொழுது

இருவர் ஜாதகத்திலும் உள்ள கிரக சேர்க்கைகளை பார்க்க வேண்டும். இந்த கிரக சேர்க்கையானது இருவருக்கும் ஒத்து வரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதைப் பற்றி தான் இந்தப் பதிவிலே தெளிவாக எழுத இருக்கிறேன் முழுமையாக படியுங்கள். Follow Our Websites https://snganapathiastrologer.com/

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய ஜோதிட விதிமுறைகள் ! 

முக்கியமாக திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக பார்த்து ஜாதகங்களை இணைக்க வேண்டும் . ஏனென்றால் இது இரண்டு பேரின் வாழ்க்கையாகும் . திருமண பந்தத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா ! எனவேதான் திருமண பொருத்தம் பார்க்கும்போது மிக கவனமாக கையாண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் ! இப்போது பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு சொல்லுகிறேன் , இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 

ஜோதிட விதிமுறை – 1

  திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? ஆண் பெண் இரு ஜாதகங்களையும் பொருத்தம் பார்க்கும் போது, முதலில் இரண்டு ஜாதகங்களில் உள்ள லக்கினத்தை கவனிக்க வேண்டும் . பெண்ணின் லக்னம் எதுவோ அந்த லக்னப்படி ஆணின் ஜாதகத்தில் லக்னம் திரிகோணத்தில் அமைவது மிக சிறந்த பொருத்தம் ஆகம் . 

திரிகோண வீடு 1,5 மற்றும் 9 

உதாரணமாக .. பெண்ணின் லக்னம் மேஷம் என்றால் , அந்த மேஷ லக்னத்திற்கு திரிகோண வீடுகளான மேஷம் , சிம்மம், தனுசு ஆணுடைய ஜாதகத்தில் லக்னமாக வருவது மிகவும் உத்தமம் ! இந்த அமைப்பை முதல் தரம் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகச்சிறந்த திருமண பொருத்தத்தில் ஒரு விதிமுறையாகும் ! இதுபோன்று லக்கனம் ஒருவருக்கொருவர் திரிகோணமாக அமையும் பொழுது இருவருக்கும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் . குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் !

கேந்திர ஸ்தானங்கள் 1,4,7 மற்றும் 10

அடுத்ததாக  நான்கு , ஏழு , பத்து என்று சொல்லக்கூடிய கேந்திர ஸ்தானங்களாக லக்னம் அமையப்பெற்று இருந்தால் திருமண பொருத்தத்தில் இது இரண்டாவது தரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பனபரஸ்தானம் 2 மற்றும் 11

அடுத்ததாக இரண்டு மற்றும் 11 வது இடமாக லக்னம் அமைய பெற்றால், இதனையும் இரண்டாவது தரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ! இதனை பனபரஸ்தானம் என்று ஜோதிடத்தில் சொல்லுவோம் .

அடுத்ததாக மறைவு ஸ்தானங்களான

மூன்று, ஆறு, எட்டு மற்றும் பன்னிரெண்டு ஆகிய இந்த ஸ்தானங்களில் ஒருவருக்கொருவர் லக்னம் அமையப்பெற்றால் , இந்த அமைப்பு உள்ள ஆண் பெண் இரு ஜாதகரையும் திருமண பொருத்தத்தில் சேர்க்கக்கூடாது . இந்த ஸ்தானங்களை மறைவு ஸ்தானம் என்று ஜோதிடத்தில் சொல்லுவோம் .

இதில் ஒரு முக்கிய குறிப்பு : 6 மற்றும் 8 ஆமிடமாக வந்தால் கண்டிப்பாக அந்த இரண்டு ஜாதகங்களையும் இணைக்கக் கூடாது ! ஜாதக பொருத்தம் இல்லை என்று அர்த்தம் . இதனை ஜோதிடத்தில் சஷ்டாஷ்டகம் என்று சொல்லுவோம் .

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?

ஜோதிட விதிமுறை – 2 

மேலே ஜோதிட விதிமுறை ஒன்றில் , லக்னத்தைக் கொண்டு எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறினேனோ , அதே முறையில் ஜென்ம ராசியை வைத்தும் பொருத்தம் பார்க்க வேண்டும் ! 

பெண்ணின் ஜென்ம ராசி படி ஆணின் ஜென்ம ராசி திரிகோணத்தில் வரவேண்டும் !

அதாவது ஒன்று , ஐந்து மற்றும் ஒன்பதாம் (1, 5 ,9 ) ஆம் வீடாக இருக்க வேண்டும் ! 

ஒன்னு நாலு ஏழு பத்து இரண்டாம் தரமாக எடுத்துக் கொள்ளவும் ! , பெண்ணின் ஜென்ம ராசிப்படி ஆணின் ஜென்ம ராசி இரண்டாம் இடம் மற்றும் பதினோராம் இடமாக தாராளமாக வரலாம் ! இது நல்ல அமைப்பு தான் . மறைவு ஸ்தானங்களான மூனு ஆறு எட்டு மற்றும் 12 ஆம் ராசிகளை தவிர்க்க வேண்டும் !

ராசி பொருத்தம் மேஷம் முதல் கன்னி வரை

உதாரணமாக : பெண்ணின் ஜென்ம ராசி ரிஷபம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) ரிஷப ராசி , கன்னி ராசி, மற்றும் மகர ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . இது முதல் தரமான அமைப்பாகும் . 

ஒரு பெண்ணின் ஜென்ம ராசி மேஷம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) மேஷ  ராசி , சிம்ம ராசி மற்றும் தனுசு ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

பெண்ணின் ஜென்ம ராசி மிதுனம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) துலாம் ராசி , கும்ப ராசி மற்றும் மிதுன ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக அமைவது உத்தமம்

அடுத்ததாக ஒரு பெண்ணின் ஜென்ம ராசி கடகம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) விருச்சிக ராசி , சிம்ம ராசி மற்றும் தனுசு ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

பெண்ணின் ஜென்ம ராசி சிம்மம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) தனுசு  ராசி , மேஷ  ராசி மற்றும் சிம்ம ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

அடுத்ததாக பெண்ணின் ஜென்ம ராசி கன்னி  என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) மகர  ராசி , ரிஷப  ராசி மற்றும் கன்னி ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

துலாம் முதல் மீனம் வரை ராசி பொருத்தம்

பெண்ணின் ஜென்ம ராசி துலாம்  என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) கும்ப  ராசி , மிதுன ராசி மற்றும் துலாம் ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக அமைவது சிறப்பு

அடுத்ததாக ஒரு பெண்ணின் ஜென்ம ராசி விருச்சிகம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) மீன ராசி , கடகம்  ராசி மற்றும் விருச்சிக ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

பெண்ணின் ஜென்ம ராசி தனுசு என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) தனுசு  ராசி , மேஷ  ராசி மற்றும் சிம்ம ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக இருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் ஜென்ம ராசி மகரம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) ரிஷப  ராசி , கன்னி  ராசி, மகர ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

அடுத்ததாக பெண்ணின் ஜென்ம ராசி கும்பம் என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) மிதுன ராசி , துலா ராசி, கும்ப ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக வரவேண்டும் . 

பெண்ணின் ஜென்ம ராசி  மீனம்  என்றால் , இதற்கு திரிகோண ராசிகளான ( 1,5,9 ) கடக ராசி , விருச்சிக ராசி, மீன ராசி ஆகிய மூன்று ராசிகளில் ஏதாவது ஒரு ராசி ஆணின் ராசியாக இருக்க வேண்டும். 

மேலே அனைத்து ராசிகளுக்கும் திரிகோண ராசிகள் விவரங்களை மட்டும் கொடுத்திருக்கிறேன் .

அடுத்து ஒரு பெண்ணின் ஜென்ம ராசி முதல் 2 மற்றும் 11 ஆம் ராசி விவரங்களை இப்பொழுது பார்க்கலாம் !

இது போல் அமைந்திருப்பின் குடும்ப விருத்தி , நல்ல வருமான பிராப்தம், பல லாப மேன்மைகளை அந்த தம்பதிகள் தங்களுடைய வாழ்நாளில் அடைவார்கள் !

மேஷம் முதல் கன்னி வரை

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது மேஷ ராசியாக இருந்தால் , ரிஷபம் மற்றும் கும்ப ராசியாக இணைப்பது நல்லது !

திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது ரிஷப ராசியாக இருந்தால் , மிதுனம் மற்றும் மீனம் ராசியாக இணைப்பது நல்லது !

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது மிதுனம் ராசியாக இருந்தால் , கடகம் மற்றும் மேஷ ராசியாக இணைப்பது நல்லது !

அடுத்ததாக திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது கடகம் ராசியாக இருந்தால் , சிம்மம் மற்றும் ரிஷப ராசியாக இணைப்பது நல்லது !

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது சிம்மம் ராசியாக இருந்தால் , கன்னி மற்றும் மிதுன ராசியாக இணைப்பது நல்லது !

அடுத்து திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது கன்னி ராசியாக இருந்தால் , துலாம் மற்றும் கடக ராசியாக இணைப்பது நல்லது !

அடுத்து துலாம் முதல் மீனம் வரை

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது துலாம் ராசியாக இருந்தால் , விருச்சிகம் மற்றும் கன்னி ராசியாக இணைப்பது நல்லது !

திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது விருச்சிகம் ராசியாக இருந்தால் , தனுசு மற்றும் கன்னி ராசியாக இணைப்பது நல்லது !

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது தனுசு ராசியாக இருந்தால் , மகரம் மற்றும் துலாம் ராசியாக இணைப்பது நல்லது !

திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது மகரம் ராசியாக இருந்தால் , கும்பம் மற்றும் விருச்சிக ராசியாக இணைப்பது நல்லது !

அடுத்து திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது கும்பம் ராசியாக இருந்தால் , மீனம் மற்றும் தனுசு ராசியாக இணைப்பது நல்லது !

இந்த திருமண பொருத்தத்தில் ,
ஒரு பெண்ணின் ஜென்ம ராசி என்பது மீன ராசியாக இருந்தால் , மேஷம் மற்றும் மகர ராசியாக இணைப்பது நல்லது ! 

அடுத்த பதிவிலே !

அதாவது – திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? பகுதி 2 இல் எந்தெந்த நட்சத்திரங்களுக்கு , எந்தெந்த நட்சத்திரங்களை திருமண பொருத்தத்தில் இணைக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதி இருக்கிறேன் அந்த பதிவையும் படித்து சரியான நட்சத்திர ரீதியிலான திருமண பொருத்தத்தை முடிவு செய்யுங்கள் !

தொலைபேசி வழி ஜாதக பலன் பார்க்க :

ஜாதக பலன் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் , என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம் ! Phone Call : 97 42 88 64 88 , What’s up : 97 42 88 64 88

For online Predictions Contact Me

2 thoughts on “திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? பகுதி – 1 | மிகச்சிறந்த முறை ! | Marriage matching”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ஜாதகம் பார்க்க படிக்க தொடர்பு கொள்ளுங்கள
Call Us for Horoscope Predict