துலாம் ராசி முதல் மீன ராசி வரை | சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை | 2025 Sani peyarchi
சனிப்பெயர்ச்சி எப்போது வருகிறது? 2025 மார்ச் மாதம் 30-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வருகிறது. ( 2025 Sani peyarchi ) கும்பத்தில் இருந்து மீன ராசியில் சனி பெயர்ச்சி ஆகிறது. இதற்கு அடுத்த சனி பெயர்ச்சி எப்போது வருகிறது ? 2027 ஜூன் மாதம் வருகிறது ! இப்போது துலாம் ராசி முதல் மீன ராசி வரை சனிப்பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம். இப்போது இந்த இடைப்பட்ட இரண்டரை வருட காலம் உங்கள் ராசிப்படி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இந்தப் பதிவில் துலாம் ராசி முதல் மீன ராசி வரை எழுதி இருக்கிறேன்! மேஷ ராசி முதல் கன்னி ராசி வரை ஏற்கனவே இன்னொரு தனி பதிவு எழுதி இருக்கிறேன் பாருங்கள் . இதே website இல் பாருங்கள்.
துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் ( 2025 Sani peyarchi )
உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . ஐந்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் பூர்வீகம் சார்ந்த சில விஷயங்களில் தொந்தரவு கொடுத்து கொண்டு வந்தார் . தொழில் வேலை விஷயங்களில் லாபமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் .
உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாம் இடத்திற்கான சனி பெயர்ச்சியானது, நல்ல அனுபவத்தை கொடுக்கும். எந்தெந்த விஷயங்களில் அனுகூலத்தை கொடுக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசி நேயர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமான நேயர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும். இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
வேலை
செய்து கொண்டு இருந்த வேலையில் தொந்தரவு ஏற்பட்டு வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வேலை சார்ந்த விஷயங்களில் எல்லாம் இனி உங்களுக்கு சாதகமாக நடக்கப்போகிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசு சார்ந்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.
தொழில்
சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இதுவரை பல தடைகள் ஏற்பட்டது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும். தொழிலாளர்களால் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருந்த தொழில், இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஒரு சீரான நிலையில் செல்லும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். உற்சாகத்துடன் உங்கள் தொழிலில் கவனம் செலுத்துவீர்கள்.
இருப்பினும் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். சுய ஜாதகத்தை என்னிடம் ஒருமுறை பார்த்து விட்டு எந்த ஒரு முடிவையும் நீங்கள் செய்யுங்கள். காரணம் சனி பெயர்ச்சி நன்றாக இருக்கிறது, அதே சமயம் ஜாதக அமைப்பும் தசா புத்தியும் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தொழிலை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். மேலும் விவரம் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் ph : 97 42 88 64 88
விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் ( 2025 Sani peyarchi )
கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சனி பகவான் பெயர் செய்கிறார் . உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான், ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டம சனியாகும். இந்த அமைப்பானது உங்களுக்கு ஏழரை சனிக்கு நிகரான பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தது. அடுத்து ஐந்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு தரக்கூடிய பலன்களை இப்பொழுது பார்க்கலாம்.
அர்த்தாஷ்டம சனி விலகுகிறது
கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான், ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டம சனியாகும். இந்த அமைப்பானது உங்களுக்கு ஏழரை சனிக்கு நிகரான பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தது. அடுத்து ஐந்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு தரக்கூடிய பலன்களை இப்பொழுது பார்க்கலாம்.
ஐந்தாம் இடத்து சனியும் உங்களுக்கு நல்ல அனுகூலம் இல்லை. பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் சில சங்கடங்கள் தரும். இருப்பினும் பயப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து நிதானமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தேவையற்ற வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
எதிர்ப்புகள் அதிகரிக்கும். எனவே வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். அதாவது பணம் யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது. அதேபோல் பணம் யாரிடம் இருந்தும் இந்த காலகட்டத்தில் கடன் வாங்க கூடாது.
தொழில்
தொழிலில் எந்தவித புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். அதாவது ஏற்கனவே உங்கள் தொழிலில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ, அதையே பின்பற்றுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடும் போது கவனம் தேவை. விதிமுறைகளை படித்து கவனித்து செயல்பட வேண்டும். நண்பர்களால் ஆதாயம் குறைவு. எனவே முக்கியமான தகவல்களை உங்களுக்குள்ளேயே வைத்து செயல்பட வேண்டும். தொழில் ரகசியங்களை யாருக்கும் சொல்லக்கூடாது.
திருமணத்தடை இருக்கும். இருப்பினும் ஜாதகத்தில் நல்ல தசா புத்தி நடைபெற்றால் திருமணம் நடக்கும். ( 2025 Sani peyarchi )
வேலை
அடுத்தவரிடத்தில் செய்யக்கூடிய வேலை ஓரளவு நல்ல விதமாக இருக்கும் . நான்காம் இடத்தில் சனி இருந்தபோது பல சங்கடங்களை வேலையில் சந்தித்தீர்கள். இப்போது ஐந்தாம் இடத்து சனியும் சில சங்கடங்களைத் தரும். இருப்பினும் முன்பு இருந்ததைப் போல் இப்போது இருக்காது. ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் நீங்கள் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்
தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
நான்காம் இடத்து சனி பெயர்ச்சி ( 2025 Sani peyarchi )
தனுசு ராசி நேயர்களே ! கும்பத்திலிருந்து மீனத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதுவரைக்கும் மூன்றாம் இடத்து சனி உங்களுக்கு 60 சதவீத நன்மைகள் கொடுத்தது. 40 சதவீதம் சில தொந்தரவுகளும் நடந்தது. அடுத்து நான்காம் இடத்து சனி பெயர்ச்சி ஆகிறது. இது நல்லதா என்றால் நல்லதில்லை. 2025 மார்ச் முதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த நிலை 2027 வரை தொடரும் .
அர்த்தாஷ்டம சனி
நான்காம் இடத்து சனி என்பது அர்த்தாஷ்டம சனி ஆகும். ஏழரை சனிக்கு நிகரான பலன்களை தரும் . உங்கள் ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் சமாளித்து விடலாம். புதிய முயற்சிகளை செய்யும்பொழுது ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள். அப்படி செய்யும் பொழுது சில தொந்தரவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்ளலாம். எனவே சுய ஜாதகத்தை கொடுத்து ஜாதகம் பாருங்கள் .
தொழில்
இதுவரைக்கும் இருந்த தொழில் முறை சற்று மாறுபடும். புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்ட செயல்களை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள். தொழிலில் புதிய திட்டங்கள் இந்த காலகட்டத்தில் சரி வராது . புதிய நண்பர்கள் தொழில் ரீதியான புதிய நண்பர்களை இப்பொழுது அருகில் சேர்க்க வேண்டாம் . 2027 க்கு பிறகு புதிய முயற்சிகளை தாராளமாக செய்யலாம் .
வேலை
தற்போது செய்து கொண்டிருக்கும் வேளையில் அதிகம் கவனம் செலுத்துங்கள் . முன்பு செய்த உழைப்பை விட தற்போது அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படி உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பேர் சொல்ல மாட்டார்கள். இந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை தேவை. யாரிடமும் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் அது உங்களுக்கு எதிராக திரும்பும். முக்கியமான நம்பிக்கை வாய்ந்த ஒரு நபரை மட்டும் நம்புங்கள். புதிய நண்பர்களை உள்ளே சேர்க்காதீர்கள். ( 2025 Sani peyarchi )
திருமணம் ஆகாதவர்கள் தற்போது அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். திருமணம் நடக்கும். ஆனால் சற்று நிதானமாக நடக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் வெற்றிகரமாக திருமணம் நடக்கும்.
மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஏழரை சனி விடுபடுகிறது ( 2025 Sani peyarchi )
இதுவரை இரண்டாம் இடத்தில் உங்களுக்கு சனி பகவான் இருந்தார். 2025 மார்ச் பிறகு மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.கடந்த ஏழரை வருடங்களாக பல இன்னல்களை சந்தித்தீர்கள். போட்டி, பொறாமை, கவலை, கஷ்டம் அனைத்தையும் சந்தித்தீர்கள். எதை எடுத்தாலும் விரைவாக செய்து முடிக்க முடியாமல் தவித்தீர்கள். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பம். நினைத்த விஷயங்கள் நடக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்கள் கை கொடுப்பார்கள். வீடு வண்டி வாகன யோகம் ஏற்படும்.
திருமணத்தடை சந்தித்தவர்களுக்கு திருமணம் கைகூடும். நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். மனக்கசப்புகள் விலகி ஒற்றுமை ஓங்கும். பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். சுய ஜாதகம் நன்றாக இருந்தால் இன்னும் சிறப்பு
தொழில்
தொழிலில் இருந்த முடக்கங்கள் விலகும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் புதிய திட்டங்களை இப்பொழுது செயல்படுத்த ஆரம்பிக்கலாம். இருப்பினும் சுய ஜாதகத்தை பார்த்து செயல்படுங்கள். தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். ஜாதகம் மிக முக்கியம். தொழில் ரீதியான லாபங்கள் உயரும். தொழிலாளர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நல்ல உற்பத்தி திறன் அதிகமாகும். தொழிலில் நல்ல மதிப்பு மரியாதை இப்பொழுது கிடைக்க ஆரம்பிக்கும்.
புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் இது நல்ல காலமே. ஆனால் உங்கள் சுய ஜாதகத்தில், சுயமாக தொழில் செய்யும் அமைப்பு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழிலில் வெற்றி அடைய முடியும். ஜாதகத்தில் தொழில் செய்யும் அமைப்பு இல்லை என்றால். நீங்கள் ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம். சுயஜாதத்தில் தொழில் அமைப்பு இருக்கும் பட்சத்தில் . நீங்கள் தாராளமாக தொழில் துவங்க ஆரம்பிக்கலாம். ஜாதகம் பார்த்து செயல்படுங்கள். இது மிக முக்கியம்.
கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
பாத சனி ஆரம்பம் ( 2025 Sani peyarchi )
ஏழரை சனியில் ஐந்து வருடங்களை கடந்து விட்டீர்கள். இன்னும் இரண்டரை வருடம் கடக்க வேண்டும். இந்த இரண்டரை வருடம் கடப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அடிமேல் அடி ஏற்பட்டது. நல்ல அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதாவது நல்ல பக்குவம் அடைந்து இருப்பீர்கள். தொழில், திருமணம், வாழ்க்கை விஷயங்களை புரிந்து கொண்டு இருப்பீர்கள். சனி பகவான் புரிய வைத்து இருக்கிறார். இந்த அனுபவம் உங்களை நல்ல வழியில் கொண்டு செல்லும். பலரை அனுசரித்து நடப்பீர்கள். இனிமேல் பலரும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
ஆனால் ஏழரை சனி இன்னும் முழுமையாக முடியவில்லை. சுப விரயங்கள் ஏற்படும். இந்த செலவானது பிற்காலத்தில் சில ஆதாயங்களை உங்களுக்கு கொடுக்கும். புதிய இடம் வாங்குவீர்கள். இது சுப செலவு. திருமணத்திற்காக செலவு செய்வீர்கள். இது சுப செலவு. இதுபோன்று சுப செலவுகள் இப்போது ஏற்படும். இது 2027 வரை தொடரும் . 2027 ஆறாவது மாதம் வரை தொடரும்.
கண்டிப்பாக திருமணம் நடக்கும். தாராளமாக திருமணம் முயற்சி செய்யலாம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமையும். அதேசமயம் , உங்கள் ஜாதகத்தில் நல்ல அனுகூலம் இருக்க வேண்டும். வெளியில் அதிகமாக கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். இருக்கும் வசதியைக் கொண்டுதான் நீங்கள் செயல்பட வேண்டும். விரலுக்கு ஏத்த வீக்கம். இதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் சுபசெலவு தானே என்று அதிகமாக செலவு செய்து விடக்கூடாது.
தொழில்
தொழில் சார்ந்த விஷயத்தில் விரயங்கள் ஏற்படும். தேவையான செலவுகளை மட்டும் கவனித்து செய்ய வேண்டும். அகல கால் வைக்கக் கூடாது. யாரையும் நம்பி பணம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக தொழில் விஷயத்தில் யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். கடனும் வாங்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். ஏற்கனவே திட்டமிட்ட செயல்களை தொடர்ந்து செயல்படுத்துங்கள். இதுவே இப்போதைக்கு போதுமானது ஆகும். உங்கள் புதிய திட்டங்களை 2026 இல் செயல்படுத்துங்கள். ஆனால் ஜாதகம் பார்த்து செயல்படுங்கள்.
வேலை
ஓரளவு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையும் நல்லவிதமாக நடக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலையும் கிடைக்கும். இருப்பினும் ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். ஏற்கனவே கிடைத்த வருமானம்தான் கிடைக்கும். வருமானத்திற்கு மீறி வரும் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் . வருமானத்திற்கு உட்பட்ட செலவுகளை மட்டுமே செய்யுங்கள். தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. இது மிகுந்த மன சுமையை கொடுத்து விடும். இருக்கும் வசதியைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.
ஏழரை சனி நடக்கிறது. ( 2025 Sani peyarchi )
உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
ஐந்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் பூர்வீகம் சார்ந்த சில விஷயங்களில் தொந்தரவு கொடுத்து கொண்டு வந்தார் . தொழில் வேலை விஷயங்களில் லாபமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் .
உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாம் இடத்திற்கான சனி பெயர்ச்சியானது, நல்ல அனுபவத்தை கொடுக்கும். எந்தெந்த விஷயங்களில் அனுகூலத்தை கொடுக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
ஜென்ம சனி
2025 மார்ச் முதல் ஜென்ம சனி ஆரம்பம். 2027 ஜூன் வரை இது தொடரும் . பிறகு விரைய சனி ஆரம்பம். எனவே புதிய திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். அதாவது புதிய திட்டங்களை தள்ளிப் போடுங்கள். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
தொழில்
புதிதாகத் தொழில் ஆரம்பிக்கக் கூடாது. இன்னும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் ஒருவேளை நல்ல தசாபுத்தி நடந்தால் ஆரம்பிக்கலாம். ஜாதகத்தைப் பார்த்து புதிய முயற்சிகளை செய்யுங்கள். இதனால் வீண் சங்கடங்களை தவிர்க்க முடியும். மீனத்திற்கு இது பெரும் போராட்டக் காலமாக இருக்கும். நினைத்த விஷயங்கள் உடனே நடக்காது. இதனால் மனச்சோர்வு ஏற்படும். தேக ஆரோக்கியம் குறையும். மருத்துவ செலவு ஏற்படும். இருப்பினும் பயப்பட வேண்டியதில்லை. வீட்டில் பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையின் உடல் நலம் பாதித்து சரியாகும்.
வேலை
வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன் கிடைக்காது. கவலைப்பட வேண்டாம். உங்கள் கடமையை செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்று செயல்படுங்கள். இந்த எண்ணங்களால் சில பாதிப்புகளில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஏழரை சனி முடியும் வரை கிடைத்த வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.
திருமணம் நடக்கும். ஆனால் அதிகம் முயற்சி செய்தால் தான் நடக்கும். திருமணம் தாமதமாக நடக்கும். சுயஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும் . ஜாதகம் நன்றாக இருந்தால் தாமதம் ஆனாலும் நல்லவிதமாக நடக்கும் . குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். தெய்வ வழிபாடு நன்மை தரும். நிதானமாக செயல்பட வேண்டும். வாழ்க்கை விஷயம் கவனம் தேவை.
மேஷ ராசி முதல் கன்னி ராசி வரை முந்தைய பதிவில் பாருங்கள்
தொலைபேசி வழி ஜாதகம் பார்க்க மற்றும் what’s up வழி ஜாதகம் படிக்க தொடர்புக்கு : 97 42 88 64 88, what’s up :95 85 88 80 87