2025 இல் பண வரவு உங்கள் ராசிப்படி /

மேஷ ராசி

2025 மார்ச் மாதம் வரை நல்ல பண வரவு இருக்கும் . அதன் பிறகு வருமானம் இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் பிறகு பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். பிறருக்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. பிறரிடம் பணம் வாங்கினாலும் உடனே திருப்பிக் கொடுக்க முடியாது. தொழில் செய்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும். 2025-ல் அதிக முதலீடு செய்யக்கூடாது.
மேலும் பண வரவு அதிகரிக்க லட்சுமி வழிபாடு செய்யுங்கள் .

ரிஷப ராசி

2025-ல் படிப்படியான வருமான உயர்வு ஏற்படும். ஏப்ரல் மாதம் பிறகு வருமானம் உயரும். புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு பணம் கிடைக்கும். புதிதாக தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்திற்கு செல்பவர்களுக்கு வருமானம் உயரும். சுய ஜாதகப்படி தசாபுத்தி நன்றாக இருந்தால் மேற் சொன்ன பலன்கள் 100% நடக்கும். பண வரவிற்காக நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் முருகர்.

மிதுன ராசி

பண வரவு இந்த 2025-ல் நன்றாக இருக்கும். வரவும் உண்டு செலவும் உண்டு. தொழில் சார்ந்த விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் இருக்கும் செலவுகளும் அதிகரிக்கும். அதிக கடன் வாங்குவதை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். தங்க நகை மற்றும் வீடு வாங்க பணம் கிடைக்கும் . சீரான வருமானம் இருக்கும். பண விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.
உங்கள் ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருந்தால் பணம் மிச்சப்படும். தசா புத்தி சரியில்லை என்றால் கவனம் தேவை. பணம் சார்ந்த விஷயங்களை கையாளும் பொழுது ஜாதகம் பார்த்து செயல்படுங்கள். பணம் போட்டு தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் ஜாதகம் பார்த்து முடிவு செய்யுங்கள். ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும்.
பண வரவிற்காக நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் ஊர் காவல் தெய்வம். முனீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

கடக ராசி

உங்களுக்கு 2024 யை விட 2025-இல் பணவரவு அதிகரிக்கும். வருமான உயர்வு ஏற்படும். அதேசமயம் வீட்டில் சுப செலவும் ஏற்படும். உங்களுக்கு சொத்து கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துகள் கிடைக்கும். பலர் உங்களுக்கு உதவி கரம் நீட்டுவார்கள். ஆனால் ஒரு விஷயம் கடன் அதிகம் வாங்க வேண்டாம். பணம் கிடைக்கிறதே என்று கடன் வாங்கி விட்டால் பிறகு தொந்தரவு தரும். வருமானத்தைக் கொண்டு நீங்கள் செலவு செய்ய வேண்டும். உங்கள் ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருக்குமேயானால் பணவரவு இன்னும் அதிகரிக்கும். பண வருவதற்காக நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம், எல்லை காவல் தெய்வம். மற்றும் குலதெய்வம்.

சிம்ம ராசி

2025 ஆம் வருடம் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்களுக்கான வருமானம் உயரம். தொட்டதெல்லாம் துலங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு வாகன யோகம் உண்டு. பூர்விக சொத்து கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த வாகனம் வாங்குவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதேபோன்று சுப செலவுகளும் உண்டு. எதற்கு செலவு செய்கிறோம் என்று கவனித்து செயல்பட வேண்டும். உங்கள் ஜனன கால ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மேற் சொன்ன பலன்கள் உங்களுக்கு 100% நடக்கும்.
பண வரவிற்காக முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி ராசி

2025-இல் பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.‌ வீண் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பணத்தை செலவு செய்வீர்கள். 2024 யை விட 2025-ல் பணவரவு அதிகரிக்கும். ஏப்ரல் மாதம் பிறகு பண வரவு அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் பணவரவு குறையும். மீண்டும் 2026 இல் பண வரவு அதிகரிக்கும். இருப்பினும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். மொத்தத்தில் 2025 இல் நல்ல பண வரவு உண்டு. உங்கள் ஜாதகப்படி தசாபுத்தி நன்றாக இருந்தால் வீடு வாகனம் வாங்குவீர்கள். நீங்கள் லட்சுமி அம்பாளை வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.

துலாம் ராசி

இந்த வருடம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வராத கடன் வந்து சேரும். இந்த வருடம் வீடு வண்டி வாகன யோகம் ஏற்படும். குரு கோச்சாரம் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் சனி பகவான் சஞ்சாரமும் உங்களுக்கு இந்த வருடம் நல்ல அனுகூலத்தை கொடுக்கப் போகிறது. வருமானம் உயரும். பதவி உயர்வு கிடைக்கும். துலாம் ராசிக்கு இந்த வருடம் நல்ல யோகமே. நினைத்ததை சாதித்து வெற்றி அடைய முடியும். சுக்கிர கிரக வழிபாடு செய்யுங்கள். மேலும் லட்சுமி வழிபாடு செய்யுங்கள். பணம் பெருகும். தேவையான அளவு பணம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

2024 விட 2025-ல் பணம் பெருகும். ஆனால் வரவுக்கும் செலவுக்கும் என்று தான் இருக்கும். உங்கள் செலவுக்கு பணம் நிச்சயமாக கிடைக்கும். அதை கொண்டு திருப்தியாக வீடு வாகனம் வாங்க முடியும். பணம் மிச்சப்படாது. இந்த வருடம் பணம் சேமிக்க முடியாது. சுப செலவு அதிகரிக்கும். எனவே தேவையான வீடு சொத்து வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்கள். உங்களுடைய முதலீடு நிரந்தர சொத்து வீடு வாகனம் சார்ந்த விஷயங்களில் செய்யவும். குழந்தைகள் வகையில் பண செலவு ஏற்படும். இந்த வருடம் முதல் மூன்று மாதம் பண வரவு அதிகரிக்கும். இடையில் பண வரவு குறையும். இருப்பினும் தொழில் வேலையில் லாபம் உண்டு. அளவான லாபம் கிடைக்கும். உங்கள் ராசிப்படி முருகப்பெருமானை வணங்குங்கள். வீண் செலவு குறைத்துக் கொள்ளுங்கள். லாபம் ஏற்படும். ஜாதகப்படி தசாபுத்தி நன்றாக இருந்தால் கூடுதல் பலம் பெறுவீர்கள்.

தனுசு

இந்த வருடம் தனயோகம் உண்டு. வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும். லட்சுமி யோகம் ஏற்படும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுயஜாதத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் கூடுதல் பலம்.‌
யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். இந்த வருடம் நீங்கள் கொடுக்கும் கடன் திரும்ப அதேபோன்று யாரிடமும் பணம் கடனாக வாங்க வேண்டாம். பணம் கடனாக வாங்கினால் திரும்ப செலுத்த முடியாது. பண விஷயத்தில் கவனம் தேவை. மற்றபடி வருமானம் அதிகரிக்கும். லாபம் மேன்மை உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குரு கோவிலுக்கு சென்று வருவதால் பண வரவு அதிகரிக்கும்.

மகரம்

இதுவரை உங்களுக்கு பல சுப விரயங்கள் ஏற்பட்டது. கடன் பிரச்சனை வீண் தொந்தரவு சந்தித்தீர்கள். இந்த 2025 இல் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். இதுவரை இருந்த பண பற்றாக்குறை தீரும். உங்கள் தேவைக்கு ஏற்ப பணவரவு உண்டு. வீட்டில் சுப நிகழ்வு நடக்கும். பணம் மிச்சப்படும். புதிய வீடு வண்டி வாகன யோகம் அமையும். இருப்பினும் சுய ஜாதகத்தைப் பார்த்து புதிய விஷயங்களை ஆரம்பியுங்கள். பணவரவிற்காக நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் சக்தி. சிவ ஆலயத்தில் உள்ள அம்மன் வழிபாடு சிறப்பு. தீராத பிரச்சனை தீரும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வெற்றி நிச்சயம்.

கும்பம்

பண வரவு அதிகரிக்கும் அதே சமயம் செலவும் அதிகரிக்கும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. திடீர் தனயோகம் ஏற்படும். வீட்டில் சுப செலவு ஏற்படும். வரவிருக்கும் செலவிற்கும் சமமாக இருக்கும். வருமானம் உயரும். ஆனால் சேமிக்க முடியாது. தேவையான விஷயங்களுக்கு செலவு செய்யுங்கள். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செலவு செய்ய வேண்டும். ஏனென்றால் வீண் செலவு இந்த காலகட்டத்தில் ஏற்படும்.‌ கூடுமானவரை வீண் செலவை தவிர்க்கவும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வருமானம் உயரும். திருப்பதி சென்று வந்தால் பண வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திருப்பதி சென்றால் ஆகாது. எனவே, அவர்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு திருப்பதிக்கு சென்று வரவும். பண தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இந்த வருடம் உங்களுக்கு பணவரவு உண்டு. தன லாபம் உண்டு. ஆனால் செலவுக்கேற்ற பணத்தொகை கையில் இருக்காது. வெளியில் கடன் வாங்க நேரிடும். உங்கள் சக்திக்கு உண்டான கடன் மட்டும் வாங்குவது நல்லது. உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு கடன் வாங்குங்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சீரான நிலை ஏற்படும். எப்போதும் உள்ள வருமானம் வரும். வருமானம் உயராது. 2024ல் இருந்த நிலையே 2025-லும் தொடரும். 2026 பிறகு உங்களுக்கு பணவரவு படிப்படியாக அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பி பணம் கொடுக்காதீர்கள். பணம் கொடுத்தால் திரும்ப வராது. 2025-ல் அடிக்கடி முருகர் கோவிலுக்கு சென்று வாருங்கள். தீராத பிரச்சனை தீரும். கடன் தொந்தரவு தீரும். முருகர் வழிபாடு உங்களுக்கு பண பிரச்சனையை தீர்க்கும்.

பண வரவு அதிகரிக்க எல்லோருக்குமான பொது பரிகாரம் !

முதல் பரிகாரம்

அஷ்டமி திதியில் மிளகு தீபம் ஏற்றுங்கள். பண வரவு அதிகரிக்கும். நம்புங்கள் நல்லதே நடக்கும். இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் செய்வதை நல்லது. காலை நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலையில் தீபம் ஏற்றலாம். ஆனால் காலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றுவதே நல்லது. அதே சமயம் தீபம் ஏற்றும் போது அஷ்டமி திதி பஞ்சாங்கம் படி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரண்டாவது பரிகாரம்

Law of Attraction
அதிகாலை நேரத்தில் எழுந்திருக்கவும். உங்கள் கையில் பணவரவு இருப்பதாக நினைத்து தியானம் செய்யுங்கள். இந்த வருடம் நன்றாக சம்பாதிக்க இருக்கிறேன் என்று தியானம் செய்யுங்கள். தியானம் என்றால் ஏதோ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சாதாரணமாக அமர்ந்த நிலையில் பணவரவை சிந்தித்தால் போதும். தொழிலில் நல்ல வருமானம் வருகிறது என்று சிந்தியுங்கள். பண வரவு குறைவாக இருந்தாலும் நிறைய பண வரவு வருகிறது என்று சிந்தியுங்கள். இதுவே Law of Attraction.

மூன்றாவது பரிகாரம்

உங்கள் வீட்டின் சுவர் கடிகாரத்தை சரியான திசையில் பொருத்துங்கள். உங்களுக்கு ஏற்படும் கஷ்டத்திற்கு இந்த கடிகாரம் மாட்டி இருக்கும் திசையும் ஒரு காரணமாகும். இது பலருக்கு தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் நான் சொன்னபடி செய்யுங்கள்.
வடக்கு திசையில் உள்ள சுவரில் பொருத்துவது நல்லது. அந்த கடிகாரம் தெற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இதுவே முதல் தரமான நல்ல அமைப்பாகும். இது போல் அமையப்பெற்றால், தன வரவு அதிகரிக்கும். பொருள் வரவு அதிகரிக்கும். வீடு வாகன யோகம் ஏற்படும் சொத்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *